Understanding the Hurt Behind Constant Criticism | தொடர்ந்து குறை கூறுவதற்குப் பின்னால் இருக்கும் மனவேதனை

Two adults having a patient, thoughtful conversation at home.

Relationships

Understanding the Hurt Behind Constant Criticism

தொடர்ந்து குறை கூறுவதற்குப் பின்னால் இருக்கும் மனவேதனை

BY DR. MEHAR NITHYAN   /   EXPERIENCE-BASED WRITING

Looking beyond fault-finding to the emotional pain a person may be carrying.

தொடர்ந்து குறை கூறுவதற்குப் பின்னால் இருக்கும் உணர்வுகளைப் புரிந்துகொள்ள ஒரு பார்வை.

English reading version of Dr. Mehar’s original Tamil writing.

When someone constantly finds fault with others, it need not mean that they are a bad person. It may be a sign that their mind is tired, under pressure and without peace.

In my writing, I describe how emotional hurt can create what I call a “perception error”: a way of seeing that repeatedly notices faults, negativity, disappointment and a lack of hope.

If a piece of software has a bug, it does not work as intended. I use that comparison to describe how a negative perception pattern can affect everyday life.

Rather than immediately hating someone who repeatedly criticises others, try to understand them. A peaceful mind seeks understanding, happiness and ways to build a life, instead of continually searching for faults.

When someone keeps complaining, the important question may not be simply, “How can I change this person?” It may also be, “Does this person need some peace?”

Before trying to put the whole world right, pay attention to the pressure within the mind.

In a family, someone may repeatedly complain, get angry or point out mistakes. What we may need to recognise is that they are carrying some pain.

When a person is stressed, emotionally wounded or exhausted, their way of seeing other people may become dominated by what is wrong.

What do we often do in response? We argue back and criticise again. The hurt then grows.

The response I emphasise is emotional comfort, love, attention and psychological support.

Psychological comfort matters. Just as the body needs nourishment, the mind needs a sense of safety.

Everyone in a family should be able to experience it as a safe space: “Even when I make a mistake, someone will try to understand me.”

People may smile outside, while we know very little about the wounds, fears and pain they carry within.

Ask each other:
• Are you really doing well?
• Is something hurting you emotionally?
• Do you need support?

A mistake need not mean withdrawing all affection from someone. Sometimes a person’s behaviour is an expression of their emotional pain.

My invitation is to look beyond the cycle of fault-finding and pay attention to our own healing as well.

We are not here simply to break each other down. We can help each other live with greater peace and happiness.

A peaceful mind helps build a supportive family. Love and understanding matter in how we care for one another.

தமிழ் · அசல் பதிவு

ஒரு மனிதர் எப்போதும் மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்றால்,

அவர் கெட்ட மனிதர் என்பதற்கான அறிகுறி அல்ல —

அவருடைய மனம் சோர்ந்து, அழுத்தத்தில் இருந்து, அமைதியை இழந்திருக்கிறது என்பதற்கான அறிகுறி.

மனம் காயப்படும்போது,
மூளை “Perception Error” என்ற தவறான பார்வையை உருவாக்குகிறது.

அதனால் மனிதர்கள் எல்லாவற்றிலும் தவறு, குறை, எதிர்மறை, நம்பிக்கையின்மை ஆகியவற்றையே பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு Software-ல் Bug வந்தால் அது சரியாக வேலை செய்யாது.
அதேபோல் மனதில் உருவாகும் இந்த “Negative Perception Error” வாழ்க்கையையே பாதிக்க ஆரம்பிக்கும்.

அதனால் எப்போதும் மற்றவர்களை குறை சொல்லும் ஒருவரை நாம் வெறுக்க வேண்டியதில்லை.

அவரை புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனெனில் அமைதியான மனம் ஒருபோதும் எல்லோரிடமும் தவறு தேடாது.

அமைதியான மனம் மனிதர்களை புரிந்துகொள்ளும்.
அமைதியான மனம் மகிழ்ச்சியை தேடும்.
அமைதியான மனம் வாழ்க்கையை உருவாக்கும்.

அதனால் யாராவது தொடர்ந்து குறை கூறிக்கொண்டே இருந்தால்,
“அவரை மாற்ற வேண்டும்” என்பதல்ல முக்கியம்.
“அவருடைய மனதிற்கு அமைதி தேவை” என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

மனதை அமைதியாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
ஏனெனில் அமைதியான மனமே நல்ல ஆரோக்கியத்தையும், நல்ல உறவுகளையும், நல்ல வாழ்க்கையையும் உருவாக்கும்.

உலகத்தை திருத்த முயற்சிப்பதற்கு முன்,
மனதின் அழுத்தத்தை சரி செய்ய வேண்டும்.
ஏனெனில் அமைதியான மனம் தான் அழகான வாழ்க்கையை உருவாக்கும்.

குடும்பங்களில் சில நேரங்களில் ஒருவர் தொடர்ந்து மற்றவர்களை குறை கூறலாம், தவறு கண்டுபிடிக்கலாம், கோபப்படலாம், குறைசொல்லலாம்.
அப்போது நாம் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் —
அவர்கள் உள்ளுக்குள் ஏதோ ஒரு வேதனையில் இருக்கிறார்கள் என்பதுதான்.

ஒரு மனிதர் மனஅழுத்தத்தில், காயத்தில், உணர்ச்சி சோர்வில் இருக்கும்போது,
மூளை “Perception Error” என்ற தவறான பார்வையை உருவாக்க ஆரம்பிக்கும்.
அதனால் அவர்கள் எல்லோரிடமும் தவறு, குறை, ஏமாற்றம், நெகட்டிவிட்டி ஆகியவற்றையே பார்க்க ஆரம்பிப்பார்கள்.

அந்த நேரத்தில் நாம் என்ன செய்கிறோம்?
திரும்பவும் வாதம் செய்கிறோம்.
திரும்பவும் குறை சொல்லுகிறோம்.
இதனால் மனம் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுகிறது.

ஆனால் உண்மையான தீர்வு என்ன?
அவர்களுக்கு மனஅமைதி, ஆறுதல், அன்பு, கவனம், உளவியல் ஆதரவு கொடுப்பது.

Psychological Comfort என்பது மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம்.
உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ, மனதிற்கு பாதுகாப்பு உணர்வு அதைவிட அவசியம்.

ஒரு குடும்பத்தில் அனைவரும் “Safe Zone” போல உணர வேண்டும்.
“நான் தவறு செய்தாலும் என்னை புரிந்துகொள்வார்கள்” என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

ஏனெனில் வெளியில் எல்லோரும் சிரிப்புடன் இருப்பார்கள்.
ஆனால் அவர்களுடைய மனதில் என்ன காயம், என்ன பயம், என்ன வேதனை இருக்கிறது என்று நமக்கு தெரியாது.

அதனால் குடும்பத்தில் நாம் ஒருவரை ஒருவர் கேட்டறிய வேண்டும்:
“நீங்கள் உண்மையில் நலமாக இருக்கிறீர்களா?”
“உங்களுக்கு ஏதாவது மனவேதனை இருக்கிறதா?”
“உங்களுக்கு ஆதரவு தேவையா?”

ஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக அவரை அன்பின்றி விட்டு விடக்கூடாது.
ஏனெனில் அந்த தவறு பல நேரங்களில் அவர்களின் மனவேதனையின் வெளிப்பாடு.

தவறு கண்டுபிடிப்பது, எல்லோரிடமும் குறை பார்ப்பது —
அது மற்றவர்களின் பிரச்சனை அல்ல.
அது மனத்தின் சோர்வு மற்றும் மூளையின் Perception Error.

அதனால் மனிதர்களை எதிர்ப்பதை விட.
நம்மை நாம் குணப்படுத்துதல்.

நாம் வாழ்வது ஒருவரை ஒருவர் உடைத்து விடுவதற்காக அல்ல.
ஒருவரை ஒருவர் உயிரோடு, அமைதியோடு, மகிழ்ச்சியோடு வாழ வைப்பதற்காக.

அமைதியான மனம் தான் நல்ல குடும்பத்தை உருவாக்கும்.
அன்பு மற்றும் புரிதல் தான் மனிதனை காப்பாற்றும்.

Ready to Talk?

Get in Touch
Scroll to Top

20+ years of experience in psychotherapy: Expert care from a seasoned professional.

Mother of three, balancing family and career: Empathetic guidance from someone who understands real-life challenges.

Spouse of a professor, fostering a healthy family dynamic: Benefit from a holistic approach that values your family health.

Personal experience with stress, anxiety, and depression: Receive support from someone who’s been through similar struggles.

A proven approach focused on ease and wisdom: Effective techniques that are easy to integrate into your life.

Advocate for transformative mental well-being: Experience meaningful changes in your mental health.

Belief in the power of a calm, conscious mind: Achieve a peaceful and focused state of mind.

Empathetic guidance rooted in real-world experience: Practical advice that works in everyday situations.

Refined and tested methods for tangible outcomes: See real improvements in your mental health and well-being.

Holistic approach addressing underlying issues: Long-lasting solutions rather than temporary fixes.

Commitment to long-term solutions over temporary fixes: Sustainable mental health improvements you can rely on.