
Emotional wellbeing
When Your Mind Feels Heavy: Choosing Someone to Talk To
மனம் கனமாக இருக்கும் போது — சரியான மனிதரை தேர்வு செய்யுங்கள்
Choosing a thoughtful, trustworthy space for sharing what is weighing on you.
மனதில் இருப்பதைப் பகிரும்போது புரிதலுடன் கேட்கும் சரியான ஆதரவைத் தேர்ந்தெடுப்போம்.
English reading version of Dr. Mehar’s original Tamil writing.
Sometimes the mind feels very heavy. Feelings become intense and it is difficult to know what to do.
At such times, many people immediately share personal difficulties with relatives, friends or people at work.
Sometimes the response can leave them feeling worse.
Why might that happen?
People often listen through their own experiences, opinions and social expectations.
Without fully understanding your circumstances, they may judge, offer advice that does not fit or begin to see you differently.
You may then feel misunderstood, more confused or more hurt.
This is why I encourage care in deciding with whom to share personal concerns.
One option is to choose a suitable mental health professional and speak with them.
A supportive professional aims to listen without judgment, understand your feelings, help you speak freely and offer guidance through appropriate psychological approaches.
Such a conversation may help the mind feel lighter, make it easier to understand your thoughts and create space to learn ways of handling your feelings.
It can also support taking the next step with greater hope.
My message is that every personal concern need not be shared in every setting. Some concerns may be more appropriately discussed with a mental health professional.
Asking for help is not weakness. It can be a considered decision to care for your mental wellbeing.
தமிழ் · அசல் பதிவு
மனம் கனமாக இருக்கும் போது — சரியான மனிதரை தேர்வு செய்யுங்கள்
சில நேரங்களில் மனம் மிகவும் கனமாக இருக்கும்.
உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும்.
என்ன செய்வது என்று புரியாமல் குழப்பமாக இருக்கும்.
அந்த நேரத்தில் பலர் உடனே தங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளை
குடும்பத்தினரிடம், நண்பர்களிடம், அல்லது அலுவலகத்தில் உள்ளவர்களிடம் பகிர்ந்து விடுகிறார்கள்.
ஆனால் சில நேரங்களில் இது திரும்பி பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஏன்?
ஏனெனில் பெரும்பாலானவர்கள் உங்கள் பிரச்சனையை
தங்களுடைய அனுபவம், கருத்து, சமூகத்தின் எண்ணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கேட்பார்கள்.
அவர்கள் முழுமையாக உங்கள் நிலையை புரிந்து கொள்ளாமல்:
• தீர்ப்பளிக்கலாம்
• தவறான ஆலோசனை வழங்கலாம்
• அல்லது உங்களைப் பற்றி வேறு விதமாக நினைக்கலாம்
இதனால் நீங்கள்:
• புரிந்து கொள்ளப்படவில்லை என்று உணரலாம்
• மேலும் குழப்பமாகலாம்
• மனவேதனை அதிகரிக்கலாம்
அதனால் தான் உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளை யாரிடமும் எளிதாக பகிராமல் கவனமாக இருக்க வேண்டும்.
இதற்கு சிறந்த வழி என்ன?
ஒரு சரியான மனநல நிபுணரை (Mental Health Expert) தேர்வு செய்து அவரிடம் பேசுவது.
மனநல நிபுணர்கள்:
• தீர்ப்பளிக்காமல் கேட்பார்கள்
• உங்கள் உணர்ச்சிகளை ஆழமாக புரிந்துகொள்வார்கள்
• நீங்கள் சுதந்திரமாக பேச உதவுவார்கள்
• சரியான உளவியல் முறைகள் மற்றும் நுட்பங்களை பயன்படுத்தி வழிகாட்டுவார்கள்
அவர்களிடம் பேசும்போது நீங்கள்:
• மனம் லேசாக உணர்வீர்கள்
• உங்கள் சிந்தனைகள் தெளிவாகும்
• உணர்ச்சிகளை எப்படி கையாளுவது என்பதை கற்றுக்கொள்வீர்கள்
• வாழ்க்கையை மீண்டும் நம்பிக்கையுடன் முன்னேற்றுவீர்கள்
நினைவில் கொள்ளுங்கள்:
எல்லா பிரச்சனைகளையும் எல்லா இடங்களிலும் பகிர வேண்டியதில்லை.
சில பிரச்சனைகள் மனநல நிபுணர்களுடன் மட்டுமே பேசப்பட வேண்டும்.
உதவி கேட்பது பலவீனம் அல்ல.
அது உங்கள் மன நலத்திற்காக எடுத்த ஒரு புத்திசாலித்தனமான முடிவு.
