
Self-understanding
The Power of Acceptance
ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தின் மகத்தான சக்தி
Accept yourself, understand others, and take the next step from a calmer place.
உங்களையும் சூழ்நிலைகளையும் ஏற்றுக்கொண்டு அமைதியிலிருந்து மாற்றத்தைத் தொடங்குங்கள்.
English reading version of Dr. Mehar’s original Tamil writing.
A peaceful mind can be the beginning of a different way of living.
When does a major change begin? It can begin in the moment we stop fighting with ourselves, with other people and with every circumstance in life.
Many of us think: “I will be peaceful when all my problems end. I will be happy when the people around me change. I will be calm when everything happens as I wish.”
But we do not have to wait for life to change before learning to feel calmer. Beginning with calm can give us the clarity and energy to make changes.
Acceptance is one key to that process.
1. Begin by accepting yourself
How often do you criticise yourself in a day?
“I cannot arrive on time. I never stay consistent. I cannot mix comfortably with everyone. I get angry too often. I postpone everything. I dislike how I look. Why am I like this?”
If these thoughts keep running, how can the mind feel peaceful?
Try a small change. Tell yourself: “It is all right. This is where I am right now. I accept my qualities, my appearance and my present situation.”
Say it with feeling. When resistance towards yourself reduces, the mind may feel lighter and it can become easier to recognise what you need.
Acceptance does not mean staying unchanged. It means beginning change from a calmer place.
2. Learn to comfort yourself
Sometimes you may have spoken in anger, made a poor decision, hurt someone or been misunderstood.
At such times, you may long for someone to understand or comfort you. Begin learning to understand your own feelings too.
Tell yourself: “It is all right. I understand what I am feeling. I can learn from this mistake. I do not need to keep condemning myself. I can put things right.”
You do not have to hate yourself because you made a mistake. You can take responsibility for repairing it while still treating yourself kindly.
We may need love and support from others. Yet our peace need not depend entirely on them.
A mind that can offer itself comfort can develop greater strength for meeting challenges.
3. Accept your present habit, then develop the quality you want
Suppose you struggle to arrive on time.
Instead of repeatedly saying, “I am always like this. I can never do things on time,” first acknowledge the current habit.
Then write your need clearly: “I want to do my work on time and act with organisation and responsibility.”
Picture waking on time, planning your tasks and finishing them steadily. Imagine enjoying that way of living.
Alongside the mental picture, take small actions that support it each day.
Acceptance settles the mind. A clear intention gives direction. Repeated action helps build a new habit.
4. Accept others while protecting your peace
People around us have strengths as well as habits that are difficult to live with.
Someone may speak angrily, find fault, use harsh words or act differently from our expectations.
Sometimes these behaviours are connected with fear, insecurity, past experience or learned ways of coping. It is not necessary to assume that every behaviour is intended as an attack on us.
Appreciate a person’s helpful qualities and try to understand the difficult ones.
Remind yourself: “Their qualities may have developed through their life experiences. I do not have to lose my peace by carrying them in my mind.”
Noticing what is good in someone may reduce unnecessary resistance in a relationship.
In this reflection, acceptance also means being mindful of what we take into our own experience. If the person is important to you, recognise the change you hope for.
Rather than losing your peace in the effort to change another person, try to improve the relationship while caring for your own peace.
5. Accept life’s circumstances
Life does not always unfold as we expect.
There may be financial problems, relationship difficulties, obstacles at work or delayed opportunities.
Instead of asking repeatedly, “Why does this happen only to me?” try saying: “I accept that this is the situation now. I can stay calm and work towards a useful change.”
Ask: “What positive change do I want to create from here?”
Define that clearly. Picture a helpful outcome and begin the actions that could move you towards it.
There is no guarantee that every difficult circumstance will end exactly as we wish. But responding steadily can improve our ability to deal with problems and make considered decisions.
A situation may be difficult without our mind having to fight it continuously.
6. Why does a calm state matter?
When worry, anger, fear, guilt and resistance fill the mind, attention can scatter and even small problems can feel large.
Practising acceptance can create a little more lightness. Greater awareness can help us notice what needs attention, and clearer attention can support more useful action.
That can matter across health, family relationships, work, finances and personal growth.
Calm does not mean that accidents and problems will never happen. It can help us notice risks, reduce avoidable errors and approach challenges more steadily.
A calm mind is not a weak mind. It is a mind that can think clearly and choose what to do.
Three keys to acceptance in the Calmscious approach
I accept myself:
“I accept where I am with kindness and work towards the positive changes I want.”
I accept others:
“I try to understand people’s qualities while caring for my peace and healthy relationships.”
I accept life’s circumstances:
“I acknowledge today’s situation and choose actions that support the future I want to build.”
Before trying to change everything in your life, learn to settle your mind.
Acceptance can reduce resistance. Calm can support awareness. Awareness can help create clearer thinking. Clear thinking can guide decisions. Decisions, followed by continued action, can support growth.
Stop fighting with yourself. Stop carrying every difficult behaviour in your mind. Stop struggling against every circumstance.
Accept. Settle. Notice. Clarify your needs. Take action.
Rather than sacrificing your peace to pursue success, learn to work towards success with greater peace.
A calmer mind can leave more energy for noticing opportunities, using them and shaping the life you want.
தமிழ் · அசல் பதிவு
மன உளைச்சலுக்கு தீர்வு ! Power of Acceptance behaviour.
ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தின் மகத்தான சக்தி!
அமைதியான மனமே அற்புதமான வாழ்க்கையின் தொடக்கம்!
உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் எப்போது தொடங்குகிறது தெரியுமா?
நீங்கள் உங்களோடும், மற்றவர்களோடும், வாழ்க்கைச் சூழ்நிலைகளோடும் போராடுவதை நிறுத்தும் அந்த நிமிடத்தில்தான்!
நம்மில் பலர் நினைக்கிறோம்:
“எல்லாப் பிரச்சினைகளும் முடிந்துவிட்டால் நிம்மதியாக இருப்பேன்.”
“என்னைச் சுற்றியுள்ளவர்கள் மாறினால் சந்தோஷமாக இருப்பேன்.”
“நான் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் அமைதியாக இருப்பேன்.”
ஆனால் உண்மை என்ன தெரியுமா?
வாழ்க்கை மாறிய பிறகு அமைதியாக இருக்க வேண்டியதில்லை. முதலில் நாம் அமைதியாக இருக்கக் கற்றுக்கொண்டால், வாழ்க்கையை மாற்றுவதற்கான தெளிவும் ஆற்றலும் நமக்குக் கிடைக்கும்.
அந்த அமைதிக்கான முதல் திறவுகோல்தான் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் (Acceptance Behaviour).
1. முதலில் உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்!
ஒரு நாளில் எத்தனை முறை உங்களை நீங்களே குறை சொல்லிக்கொள்கிறீர்கள்?
“என்னால் நேரத்திற்குச் செல்ல முடியவில்லை.”
“நான் எதையும் தொடர்ந்து செய்வதில்லை.”
“என்னால் எல்லோரிடமும் சகஜமாகப் பழக முடியவில்லை.”
“எனக்கு அடிக்கடி கோபம் வருகிறது.”
“எல்லா வேலைகளையும் தள்ளிப்போடுகிறேன்.”
“என்னுடைய உடல் தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை.”
“நான் ஏன் இப்படி இருக்கிறேன்?”
இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்கள் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தால், மனம் எப்படி நிம்மதியாக இருக்கும்?
இப்போது ஒரு சிறிய மாற்றத்தைச் செய்யுங்கள்.
உங்களிடம் நீங்களே சொல்லுங்கள்:
“பரவாயில்லை! நான் இப்போது இப்படித்தான் இருக்கிறேன். என்னுடைய குணங்களையும், தோற்றத்தையும், தற்போதைய நிலையையும் நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.”
இந்த வார்த்தைகளை உணர்வோடு சொல்லிப் பாருங்கள்.
உங்களை நீங்களே எதிர்ப்பது குறையும்போது மன அழுத்தமும் குறையத் தொடங்கும்.
மனம் லேசாகும்.
சிந்தனையில் தெளிவு கிடைக்கும்.
உங்களுடைய உண்மையான தேவைகளைப் புரிந்துகொள்ள முடியும்.
ஏற்றுக்கொள்வது என்பது மாறாமல் இருப்பது அல்ல. நிம்மதியான மனநிலையிலிருந்து மாற்றத்தைத் தொடங்குவது.
2. உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!
வாழ்க்கையில் சில நேரங்களில் தவறு செய்துவிடலாம்.
கோபமாகப் பேசியிருக்கலாம்.
தவறான முடிவை எடுத்திருக்கலாம்.
யாரையாவது காயப்படுத்தியிருக்கலாம்.
அல்லது மற்றவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம்.
அந்த நேரத்தில் நம்முடைய மனம் என்ன எதிர்பார்க்கிறது?
“யாராவது என்னைப் புரிந்துகொள்ள மாட்டார்களா?”
“யாராவது எனக்கு ஆறுதல் சொல்ல மாட்டார்களா?”
ஆனால் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்.
உங்களுடைய உணர்வுகளை முதலில் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டியவர் நீங்கள்தான்.
உங்களுக்கு நீங்களே சொல்லுங்கள்:
“பரவாயில்லை! நான் என்னுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன். நான் செய்த தவறிலிருந்து கற்றுக்கொள்கிறேன். என்னை நானே குற்றம் சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை. என்னால் சரிசெய்ய முடியும். நான் அமைதியாக இருக்கிறேன்.”
மீண்டும் மீண்டும் ஆறுதல் சொல்லுங்கள்.
தவறு செய்திருந்தாலும் உங்களை வெறுக்க வேண்டியதில்லை.
தவறைச் சரிசெய்வதற்கான பொறுப்பையும் எடுத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் உங்களிடம் அன்பாகவும் இருக்கலாம்.
மற்றவர்களின் அன்பும் ஆதரவும் நமக்குத் தேவைப்படலாம். ஆனால் நம்முடைய மன அமைதி முழுவதும் மற்றவர்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதில்லை.
தனக்குத்தானே ஆறுதல் சொல்லத் தெரிந்த மனம், சவால்களைச் சந்திக்கும் வலிமையை வளர்த்துக்கொள்கிறது.
3. முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள்! பிறகு நீங்கள் விரும்பும் குணத்தை உருவாக்குங்கள்!
உதாரணமாக, உங்களால் நேரத்திற்குச் செல்ல முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம்.
தினமும்,
“நான் எப்போதுமே இப்படித்தான்!”
“என்னால் நேரத்திற்கு எதையும் செய்ய முடியாது!”
என்று நினைத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை.
முதலில் சொல்லுங்கள்:
“பரவாயில்லை! என்னுடைய தற்போதைய பழக்கத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.”
பிறகு உங்களுடைய தேவையைத் தெளிவாக எழுதுங்கள்.
“நான் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் செய்கிறேன். நான் ஒழுங்காகவும், பொறுப்பாகவும் செயல்படுகிறேன்.”
இப்போது அதைக் கற்பனை செய்யுங்கள்.
நீங்கள் சரியான நேரத்தில் எழுகிறீர்கள்.
உங்கள் வேலைகளைத் திட்டமிடுகிறீர்கள்.
எல்லாவற்றையும் நிதானமாக முடிக்கிறீர்கள்.
அந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர்கள்.
இந்தக் காட்சியை மனதில் தெளிவாக உருவாக்கி, அதற்கேற்ற சிறிய செயல்களைத் தினமும் செய்யுங்கள்.
மெல்ல மெல்ல புதிய பழக்கங்கள் உருவாகத் தொடங்கும்.
ஏற்றுக்கொள்ளுதல் மனதை அமைதிப்படுத்துகிறது. தெளிவான எண்ணம் வழிகாட்டுகிறது. தொடர்ச்சியான செயல் புதிய குணத்தை உருவாக்குகிறது.
4. மற்றவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்! உங்கள் மன அமைதியைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரிடமும் நல்ல குணங்களும், சில சிரமமான பழக்கங்களும் இருக்கின்றன.
ஒருவர் கோபமாகப் பேசலாம்.
ஒருவர் அடிக்கடி குறை சொல்லலாம்.
ஒருவர் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.
ஒருவர் நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நடக்கலாம்.
இப்படிப்பட்ட நடத்தைகளுக்குப் பின்னால் சில நேரங்களில் பயம், பாதுகாப்பின்மை, பழைய அனுபவங்கள் அல்லது வாழ்க்கையைச் சமாளிக்கக் கற்றுக்கொண்ட பழக்கங்கள் இருக்கலாம்.
அதனால் எல்லா நடத்தைகளையும் நம்மைத் தாக்குவதற்காகவே செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டியதில்லை.
ஒருவரிடம் இருக்கும் நல்ல குணங்களைப் பாராட்டுங்கள். அவருடைய சிரமமான குணங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
உங்களிடம் சொல்லிக்கொள்ளுங்கள்:
“அவருடைய குணம் அவருடைய வாழ்க்கை அனுபவங்களால் உருவாகியிருக்கலாம். அதை நினைத்து என்னுடைய மன அமைதியை நான் இழக்க வேண்டியதில்லை.”
ஒருவருடைய நல்ல குணங்களை அதிகமாகக் கவனிக்கும்போது உறவுகளில் தேவையற்ற எதிர்ப்புகள் குறையலாம்.
ஆனால் ஏற்றுக்கொள்வது என்பது அவற்றை நாம் ஈர்க்காமல் பார்த்துகொள்ளும்.
அந்த நபர் உங்களுக்கு முக்கியமானவர் என்றால், அவரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை உணர்ந்து பாருங்கள்.
மற்றவர்களை மாற்றுவதற்காக உங்கள் அமைதியை இழக்காதீர்கள். உங்கள் அமைதியைப் பாதுகாத்துக்கொண்டு உறவுகளை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்.
5. வாழ்க்கைச் சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்!
வாழ்க்கையில் எல்லாமே நாம் நினைத்தபடி நடப்பதில்லை.
சில நேரங்களில் பணப் பிரச்சினை வரலாம்.
உறவுகளில் சிக்கல்கள் ஏற்படலாம்.
தொழிலில் தடைகள் வரலாம்.
நாம் எதிர்பார்த்த வாய்ப்புகள் தாமதமாகலாம்.
அந்த நேரத்தில்,
“எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?”
என்று மீண்டும் மீண்டும் நினைப்பதற்குப் பதிலாகச் சொல்லுங்கள்:
“இந்தச் சூழ்நிலையை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் அமைதியாக இருக்கிறேன். இந்த நிலையிலிருந்து ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க என்னால் முடியும்.”
அடுத்து ஒரு முக்கியமான கேள்வியைக் கேளுங்கள்.
“இந்தச் சூழ்நிலைக்குப் பிறகு என்னுடைய வாழ்க்கையில் என்ன நல்ல மாற்றம் உருவாக வேண்டும்?”
அதைத் தெளிவாக வரையறுக்குங்கள்.
உங்களுடைய மனதில் அந்த நல்ல முடிவைக் கற்பனை செய்யுங்கள்.
பிறகு அந்த முடிவை நோக்கிச் செல்ல வேண்டிய செயல்களைத் தொடங்குங்கள்.
ஒவ்வொரு கடினமான சூழ்நிலையும் நாம் விரும்பியபடியே முடியும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
ஆனால் அதை ஏற்றுக்கொண்டு நிதானமாகச் செயல்படும்போது, பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறனும் சரியான முடிவுகளை எடுக்கும் வாய்ப்பும் அதிகரிக்கின்றன.
சூழ்நிலை கடினமாக இருக்கலாம். ஆனால் அந்தச் சூழ்நிலையால் உங்கள் மனம் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை.
6. அமைதியான மனநிலை ஏன் அவ்வளவு சக்திவாய்ந்தது?
உங்கள் மனம் தொடர்ந்து கவலை, கோபம், பயம், குற்ற உணர்வு, எதிர்ப்பு போன்ற எண்ணங்களால் நிரம்பியிருந்தால் என்ன நடக்கும்?
உங்களுடைய கவனம் சிதறலாம்.
சிந்தனைத் தெளிவு குறையலாம்.
சிறிய பிரச்சினைகள்கூட பெரிதாகத் தோன்றலாம்.
ஆனால் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பழகும்போது மனம் லேசாகத் தொடங்கும்.
மனம் லேசாகும்போது விழிப்புணர்வு அதிகரிக்கும்.
விழிப்புணர்வு அதிகரிக்கும்போது தேவையான விஷயங்களில் கவனம் செலுத்த முடியும்.
கவனம் அதிகரிக்கும்போது செயல்பாடுகள் மேம்படும்.
இதனால் உடல்நலம், குடும்ப உறவுகள், தொழில், பொருளாதாரம், தனிப்பட்ட வளர்ச்சி போன்ற வாழ்க்கையின் பல பகுதிகளிலும் நல்ல முடிவுகளை நோக்கிச் செயல்பட முடியும்.
அமைதியாக இருப்பதால் விபத்துகளோ பிரச்சினைகளோ ஒருபோதும் வராது என்று சொல்ல முடியாது. ஆனால் அமைதியான மனம் ஆபத்துகளைக் கவனிக்கவும், தேவையற்ற தவறுகளைக் குறைக்கவும், சவால்களை நிதானமாகக் கையாளவும் உதவும்.
அமைதியான மனம் என்பது பலவீனமான மனம் அல்ல. தெளிவாகச் சிந்தித்து, சரியான நேரத்தில் சரியான செயலைத் தேர்ந்தெடுக்கக்கூடிய மனம்.
CALMSCIOUS — ஏற்றுக்கொள்ளுதலின் மூன்று முக்கியத் திறவுகோல்கள்
1. என்னை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
“நான் இப்போது எப்படி இருக்கிறேனோ அதை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன். நான் விரும்பும் நல்ல மாற்றங்களை மகிழ்ச்சியாக உருவாக்குகிறேன்.”
2. மற்றவர்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
“ஒவ்வொருவருடைய குணங்களையும் புரிந்துகொள்கிறேன். என்னுடைய மன அமைதியையும் ஆரோக்கியமான உறவுகளையும் பாதுகாக்கிறேன்.”
3. வாழ்க்கைச் சூழ்நிலைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
“இன்றைய சூழ்நிலையை நிதானமாக ஏற்றுக்கொண்டு, என்னுடைய அழகான எதிர்காலத்திற்கான சரியான செயல்களைத் தேர்ந்தெடுக்கிறேன்.”
⸻
இறுதியாக ஒரு முக்கியமான உண்மை!
உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்றுவதற்கு முன்பு, உங்கள் மனதை அமைதிப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஏனென்றால்,
ஏற்றுக்கொள்ளுதல் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
மன அமைதி விழிப்புணர்வை அதிகரிக்கிறது.
விழிப்புணர்வு சிந்தனைத் தெளிவை உருவாக்குகிறது.
சிந்தனைத் தெளிவு சரியான முடிவுகளுக்கு வழிகாட்டுகிறது.
சரியான முடிவுகளும் தொடர்ச்சியான செயல்களும் வாழ்க்கையில் வளர்ச்சியையும் வெற்றியையும் உருவாக்குகின்றன.
நீங்கள் உங்களை எதிர்ப்பதை நிறுத்துங்கள்.
மற்றவர்களின் நடத்தைகளை மனதில் சுமந்து கொண்டிருப்பதை நிறுத்துங்கள்.
ஒவ்வொரு சூழ்நிலையுடனும் போராடுவதை நிறுத்துங்கள்.
ஏற்றுக்கொள்ளுங்கள்!
அமைதியாகுங்கள்!
விழிப்புணர்வுடன் இருங்கள்!
உங்களுடைய தேவைகளைத் தெளிவாக உருவாக்குங்கள்!
அதற்கேற்ற செயல்களைச் செய்யுங்கள்!
“வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காக மன அமைதியை இழக்காமல், மன அமைதியுடன் வாழ்ந்து, வெற்றியை உருவாக்குங்கள்!”
உங்களுடைய மனம் அமைதியாக இருக்கும்போது, வாழ்க்கையில் உருவாகும் வாய்ப்புகளைக் கவனிக்கவும், அவற்றைப் பயன்படுத்தவும், நீங்கள் விரும்பும் வாழ்க்கையை உருவாக்கவும் அதிக ஆற்றல் கிடைக்கிறது.
