Moving Beyond Guilt | குற்ற உணர்வு – அதிலிருந்து மீண்டு வருவது எப்படி?

A man repairing a terracotta pot in a courtyard.

Self-understanding

Moving Beyond Guilt

குற்ற உணர்வு – அதிலிருந்து மீண்டு வருவது எப்படி?

BY DR. MEHAR NITHYAN   /   EXPERIENCE-BASED WRITING

Separate a mistake from your identity, make amends where you can, and move forward.

தவறிலிருந்து கற்றுக்கொண்டு, சரிசெய்ய வேண்டியதைச் சரிசெய்து, வாழ்க்கைக்குத் திரும்புங்கள்.

English reading version of Dr. Mehar’s original Tamil writing.

“I made a mistake. I should have done better. This happened because of me. I let them down. I am not a good person.”

Repeatedly speaking to ourselves this way is one form guilt can take.

Where did that inner voice begin?

For some people, it developed gradually during childhood.

Imagine a child who finds it difficult to wake early. They repeatedly hear: “You should not sleep so long. You are not responsible. You should have got up earlier.”

Eventually the child may move from thinking, “I woke up late,” to thinking, “There is something wrong with me.”

Something similar can happen with studies. Repeated warnings about poor effort, marks, college and a wasted future may eventually become the child’s own inner voice.

“I am not doing things properly. I am the problem.”

That voice can continue into adult life.

Guilt can take new forms

“I should have been a better parent. I did not treat my partner properly. I have not done enough for my parents. The relationship ended because of me. I should never have made that decision. I ruined my own life.”

People carry many such burdens.

Yet guilt is not all the same. It may arise from failing to meet another person’s expectations, family or social pressure, or a genuine sense of having acted against our own values.

Ask more than, “Did I do something wrong?”

Ask: “Is there something I need to repair or learn? Or am I continuing to punish myself for something that has already ended?”

Taking responsibility is different from punishing yourself.

Responsibility says: “I made a mistake. What can I do now?”

Self-condemnation says: “I made a mistake, so I am a bad person.”

One response can support growth. The other can keep us in the past.

Ten ways to work with guilt

1. Give peace of mind some priority

Before trying to fix everything immediately, let the mind settle.

An unsettled mind revisits the past. A calmer mind can ask, “What do I need to do now?”

Tell yourself: “My peace matters. Calm can help me take responsibility clearly.”

2. Step out of repeated mental replay

“I should not have done that. Why did I say it? I could have decided differently.”

Replaying the same event a hundred times does not change it.

When the replay begins, pause, notice your breathing, notice the thought and return to the present.

You do not need to conduct the same investigation in your mind every day.

3. Separate “I am wrong” from “I did something wrong”

Instead of calling yourself a bad person, say: “One of my actions may have been wrong. That action is not my whole identity.”

One decision, failure, relationship or event cannot define your entire life.

4. Accept that you cannot satisfy everyone

Parents, partners, children, workplaces and society may all hold different expectations.

You cannot meet every expectation at every moment.

Ask: “Is this actually my responsibility, or am I carrying someone else’s expectation as guilt?”

5. Allow yourself to be human

Life is not an examination in which every decision must score one hundred.

We may make poor choices, trust the wrong person, become angry, miss opportunities or disappoint someone.

Acknowledge a mistake and ask what you can learn. Accepting it does not require lifelong punishment.

6. Practise acceptance

“This happened. I cannot change yesterday. But I can change what I choose to do today.”

Acknowledge what happened, your present nature, your limitations and what cannot be changed.

Then ask: “What can I change now?”

7. Turn guilt into a lesson

Ask:
• What happened?
• What did I learn?
• What will I do differently next time?

After taking the lesson, you need not keep carrying the punishment.

Move from mistake to learning to growth.

8. Return to your goals

Guilt looks backwards. A goal gives you a direction forwards.

Alongside asking why something happened, ask: “How do I want my life to be from today?”

Return to your studies, work, health, family, interests or purpose.

A useful response to yesterday’s mistake can be a constructive action today.

9. Repair what can be repaired

If someone has been hurt by your behaviour, you may be able to apologise, make amends, change your behaviour and take responsibility.

Continuing to punish yourself after doing what you can will not change the past.

Tell yourself: “I take responsibility, and I will also care for my peace.”

10. Move from “Why did I do that?” to “What do I need now?”

Do you need to apologise, change a habit, forgive yourself, establish a boundary, accept what happened or return to a goal?

Or do you need to step out of repeated replay?

Shift attention from the problem alone towards the present need.

Activity 1: Guilt Court

Take a sheet of paper. Write what you are blaming yourself for.

Then answer:
• What actually happened?
• What was within my control?
• What was outside my control?
• What did I know at the time?
• What do I know now that I did not know then?
• What have I learned?

Finish with: “I repair what I can, learn what I need to learn and release what I cannot change.”

Close the paper. You need not reopen the same case every day.

Activity 2: Guilt or Action?

Make two columns: Guilt and Action.

“I spoke angrily.”
Action: “I will apologise and practise speaking more calmly.”

“I did not study as I hoped.”
Action: “I will study with full attention for thirty minutes today.”

“I cannot change what happened five years ago.”
Action: “I will acknowledge it and return to today’s life.”

Give yourself a point whenever you turn a guilt thought into a constructive action. Try collecting five action points in a day.

Activity 3: The Guilt Backpack

Imagine carrying a bag filled with stones. Each stone is a thought such as: “I was not a good parent. The relationship ended because of me. I lost an opportunity. I made the wrong decision. I disappointed someone.”

Write each burden on a small piece of paper.

For each, ask whether it calls for repair, learning or release.

If repair is possible, write an action. If there is a lesson, write it down. If there is nothing further to change, say, “I do not need to carry this every day,” and tear up the paper.

A final reflection

You do not have to prove that every decision you ever made was correct before allowing yourself to live peacefully.

Yes, mistakes may have happened. You may have done some things differently or misunderstood someone. Others may have misunderstood you too.

You made decisions within the circumstances, understanding and state of mind you had then.

Learn what there is to learn. Repair what you can. Accept what cannot be changed. Then return to your life.

Your past can teach you without continually punishing your present. Your mistakes can guide you without becoming your identity.

Let responsibility help you grow, rather than letting guilt imprison you.

“I cannot change what happened. I can influence what I do next.”

தமிழ் · அசல் பதிவு

குற்ற உணர்வு – அதிலிருந்து மீண்டு வருவது எப்படி?

“நான் தவறு செய்துவிட்டேன்…”
“நான் இன்னும் நன்றாக செய்திருக்க வேண்டும்…”
“என்னால்தான் இப்படி நடந்துவிட்டது…”
“நான் அவர்களை ஏமாற்றிவிட்டேன்…”
“நான் சரியான மனிதர் இல்லை…”

இப்படி நம்மை நாமே குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதுதான் பல நேரங்களில் குற்ற உணர்வு (Guilt).

நம்மை நாமே குற்றம் சொல்லிக்கொள்ளும் இந்தக் குரல் எங்கிருந்து வந்தது?

பலருக்கு அது குழந்தைப் பருவத்திலிருந்தே மெதுவாக உருவாகியிருக்கலாம்.

ஒரு குழந்தையால் காலையில் சீக்கிரம் எழ முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம்.

“இவ்வளவு நேரம் தூங்கக்கூடாது.”

“நீ பொறுப்பாகவே இல்லை.”

“சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்.”

என்று தொடர்ந்து சொல்லப்படும்போது, அந்தக் குழந்தை ஒரு கட்டத்தில்,

“நான் தாமதமாக எழுந்தேன்” என்று நினைப்பதை விட்டுவிட்டு,

“என்னிடம்தான் ஏதோ தவறு இருக்கிறது” என்று நினைக்க ஆரம்பிக்கலாம்.

படிப்பிலும் இதே நிலை ஏற்படலாம்.

“நீ சரியாகப் படிக்கவில்லை.”

“இப்படியே இருந்தால் நல்ல மதிப்பெண் கிடைக்காது.”

“நல்ல கல்லூரிக்குப் போக முடியாது.”

“உன் வாழ்க்கையே வீணாகிவிடும்.”

என்று மீண்டும் மீண்டும் கேட்கும்போது, ஒரு கட்டத்தில் பெற்றோர் சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

அந்தக் குரலை அந்தக் குழந்தையின் மனமே பேச ஆரம்பித்துவிடும்.

“நான் சரியாக செய்யவில்லை.”

“என்னால்தான் பிரச்சனை.”

இதுதான் பல நேரங்களில் வளர்ந்து பெரியவர்களான பிறகும் நம்முடன் பயணிக்கிறது.

பெரியவர்களான பிறகு குற்ற உணர்வு வேறு வடிவம் எடுக்கிறது

“என் குழந்தைகளுக்கு நான் இன்னும் நல்ல பெற்றோராக இருந்திருக்க வேண்டும்.”

“என் கணவர் அல்லது மனைவியிடம் நான் சரியாக நடந்துகொள்ளவில்லை.”

“என் பெற்றோருக்காக நான் போதுமான அளவு செய்யவில்லை.”

“அந்த உறவு முறிந்ததற்கு நான்தான் காரணம்.”

“அந்த முடிவை நான் எடுத்திருக்கக்கூடாது.”

“என் வாழ்க்கையை நானே கெடுத்துக்கொண்டேன்.”

இப்படி எண்ணற்ற குற்ற உணர்வுகளை மனிதர்கள் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எல்லா guilt-உம் ஒரே மாதிரியானது அல்ல.

சில நேரங்களில் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாததால் guilt வருகிறது.

சில நேரங்களில் குடும்பம் அல்லது சமூகத்தின் எதிர்பார்ப்புகள் காரணமாக வருகிறது.

சில நேரங்களில் நம்முடைய சொந்த மதிப்புகளுக்கு எதிராக நாம் நடந்துகொண்டதாக உணரும்போது இயல்பான guilt உருவாகலாம்.

எனவே,

“நான் தவறு செய்தேனா?”

என்பதை மட்டும் கேட்காமல்,

“இங்கே நான் ஏதாவது சரிசெய்ய வேண்டுமா? கற்றுக்கொள்ள வேண்டுமா? அல்லது ஏற்கனவே முடிந்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னை நானே தொடர்ந்து தண்டித்துக் கொண்டிருக்கிறேனா?”

என்று கேளுங்கள்.

பொறுப்பேற்பதற்கும், நம்மை நாமே தண்டித்துக்கொள்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

பொறுப்பு:

“நான் ஒரு தவறு செய்தேன். இனி என்ன செய்யலாம்?”

குற்ற உணர்வு:

“நான் தவறு செய்தேன். அதனால் நானே தவறான மனிதர்.”

முதல் எண்ணம் நம்மை வளர்க்கும்.

இரண்டாவது எண்ணம் நம்மை கடந்த காலத்திலேயே வைத்திருக்கும்.

குற்ற உணர்விலிருந்து வெளிவர 10 முக்கிய வழிகள்

1. முதலில் மன அமைதிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

எல்லாவற்றையும் உடனடியாக சரிசெய்ய முயற்சி செய்வதற்கு முன்பு மனதை அமைதிப்படுத்துங்கள்.

கலங்கிய மனம் கடந்த காலத்தை மீண்டும் மீண்டும் நினைக்கும்.

அமைதியான மனம்தான்:

“இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?”

என்று சிந்திக்கும்.

உங்களுக்குள் சொல்லுங்கள்:

“என் மன அமைதி எனக்கு முக்கியம். அமைதியாக இருந்தால்தான் என்னால் சரியான முடிவை எடுக்க முடியும்.”

அமைதி என்பது பொறுப்பை தெளிவாக கையாள்வதற்கான மனநிலை.

2. நடந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் மனதில் ஓட்டுவதை நிறுத்துங்கள்

“அப்படி செய்திருக்கக்கூடாது…”

“ஏன் அப்படி பேசினேன்?”

“அன்றைக்கு வேறு முடிவு எடுத்திருக்கலாமே…”

என்று ஒரே சம்பவத்தை நூறு முறை நினைத்தாலும் கடந்த காலம் மாறப்போவதில்லை.

அந்த எண்ணம் வரும்போது:

STOP → மூச்சை கவனியுங்கள் → எண்ணத்தை கவனியுங்கள் → நிகழ்காலத்திற்கு திரும்புங்கள்.

ஒரு சம்பவத்திற்கு உங்கள் மனதிற்குள் தினமும் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை.

3. “நான் தவறு” என்பதையும் “நான் ஒரு தவறு செய்தேன்” என்பதையும் பிரித்துப் பாருங்கள்

“நான் தவறானவன் / தவறானவள்”

என்று சொல்லாதீர்கள்.

அதற்கு பதிலாக:

“என்னுடைய ஒரு செயல் தவறாக இருக்கலாம். ஆனால் அந்த ஒரு செயல் என்னுடைய முழு அடையாளமும் அல்ல.”

என்று சொல்லுங்கள்.

ஒரு தவறான முடிவு, ஒரு தோல்வி, ஒரு உறவு, ஒரு தேர்வு, ஒரு சம்பவம் உங்கள் முழு வாழ்க்கையையும் வரையறுக்க முடியாது.

4. எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்

பெற்றோருக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கலாம்.

துணைக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கலாம்.

குழந்தைகளுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கலாம்.

வேலை செய்யும் இடத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கலாம்.

சமூகத்திற்கும் பல எதிர்பார்ப்புகள் இருக்கலாம்.

அனைவருடைய எதிர்பார்ப்பையும் எல்லா நேரங்களிலும் நிறைவேற்றுவது சாத்தியமில்லை.

எனவே உங்களிடம் கேளுங்கள்:

“இது உண்மையில் என்னுடைய பொறுப்பா? அல்லது வேறு ஒருவருடைய எதிர்பார்ப்பை நான் guilt ஆக சுமந்து கொண்டிருக்கிறேனா?”

5. தவறு செய்ய உங்களுக்கும் உரிமை இருக்கிறது

வாழ்க்கை என்பது ஒவ்வொரு முடிவிலும் 100 மதிப்பெண் வாங்க வேண்டிய தேர்வு அல்ல.

சில நேரங்களில் தவறான முடிவு எடுப்போம்.

சில நேரங்களில் தவறான மனிதரை நம்புவோம்.

சில நேரங்களில் கோபப்படுவோம்.

சில வாய்ப்புகளைத் தவறவிடுவோம்.

சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம்.

அது மனித வாழ்க்கையின் ஒரு பகுதி.

“ஆம், நான் தவறு செய்திருக்கலாம். அதை நான் புரிந்துகொள்கிறேன். இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?”

என்று கேளுங்கள்.

தவறை ஏற்றுக்கொள்வது நல்லது.

ஆனால் வாழ்நாள் முழுவதும் அதற்காக உங்களைத் தண்டித்துக்கொள்வது தேவையில்லை.

6. ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்

Acceptance என்பது:

“இது நடந்துவிட்டது. நேற்று நடந்ததை மாற்ற முடியாது. ஆனால் இன்று நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை மாற்ற முடியும்.”

என்று புரிந்துகொள்வது.

நடந்ததை ஏற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் இயல்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் குறைகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்.

பிறகு,

“இப்போது என்னால் எதை மாற்ற முடியும்?”

என்று பாருங்கள்.

7. குற்ற உணர்வை பாடமாக மாற்றுங்கள்

மூன்று கேள்விகளை மட்டும் கேளுங்கள்:

என்ன நடந்தது?

அதிலிருந்து நான் என்ன கற்றுக்கொண்டேன்?

அடுத்த முறை நான் என்ன வித்தியாசமாகச் செய்யப் போகிறேன்?

பாடத்தை எடுத்துக்கொண்ட பிறகு, தண்டனையை தொடர்ந்து சுமக்க வேண்டியதில்லை.

Mistake → Learning → Growth

என்று மாற்றுங்கள்.

“இந்த அனுபவம் என்னை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு படிக்கட்டு.”

என்று நினையுங்கள்.

8. உங்கள் இலக்கிற்குத் திரும்புங்கள்

Guilt நம்மை பின்னால் பார்க்க வைக்கும்.

Goal நம்மை முன்னால் பார்க்க வைக்கும்.

“நான் ஏன் அப்படி செய்தேன்?”

என்பதை மட்டும் நினைத்துக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு:

“இன்றிலிருந்து என் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?”

என்று கேளுங்கள்.

உங்கள் படிப்பிற்குத் திரும்புங்கள்.

வேலைக்குத் திரும்புங்கள்.

ஆரோக்கியத்திற்குத் திரும்புங்கள்.

குடும்பத்திற்குத் திரும்புங்கள்.

உங்கள் passion-க்கு திரும்புங்கள்.

உங்கள் வாழ்க்கையின் purpose-க்கு திரும்புங்கள்.

நேற்றைய தவறுக்கு மிகச்சிறந்த பதில், இன்றைய நல்ல செயல்.

9. சரிசெய்ய முடிந்ததை சரிசெய்யுங்கள்; முடியாததை விடுங்கள்

நம்மால் உண்மையாகவே ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால்:

மன்னிப்பு கேட்கலாம்.

தேவையானதை சரிசெய்யலாம்.

நமது நடத்தையை மாற்றலாம்.

பொறுப்பேற்கலாம்.

ஆனால் செய்ய வேண்டியதைச் செய்த பிறகும் நம்மை நாமே தண்டித்துக்கொண்டிருப்பதால் கடந்த காலம் மாறாது.

உங்களுக்குள் சொல்லுங்கள்:

“நான் பொறுப்பேற்கிறேன். ஆனால் என் மன அமைதியை அழித்துக்கொள்ள மாட்டேன்.”

10. “நான் ஏன் இப்படி செய்தேன்?” என்பதிலிருந்து “இப்போது எனக்கு என்ன தேவை?” என்பதற்கு வாருங்கள்

Guilt வந்தவுடன்:

“ஏன் நான் அப்படி செய்தேன்?”

என்று மட்டும் கேட்காதீர்கள்.

அதற்குப் பதிலாக:

“இப்போது எனக்கு என்ன தேவை?”

என்று கேளுங்கள்.

மன்னிப்பு கேட்க வேண்டுமா?

ஒரு பழக்கத்தை மாற்ற வேண்டுமா?

என்னை நான் மன்னிக்க வேண்டுமா?

ஒரு boundary அமைக்க வேண்டுமா?

நடந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

என் இலக்கிற்குத் திரும்ப வேண்டுமா?

அல்லது கடந்த காலத்தை மீண்டும் மீண்டும் நினைப்பதை மட்டும் நிறுத்த வேண்டுமா?

Problem-லிருந்து Need-க்கு மனதை மாற்றுங்கள்.

GAME 1 – “Guilt Court”

ஒரு பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள்.

முதலில் எழுதுங்கள்:

“நான் என்ன விஷயத்திற்காக என்னையே குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்?”

பிறகு இந்தக் கேள்விகளுக்கு பதில் எழுதுங்கள்:

உண்மையில் என்ன நடந்தது?

இதில் என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்தது எது?

என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாதது எது?

அப்போது எனக்குத் தெரிந்த விஷயங்கள் என்ன?

இப்போது எனக்குத் தெரியும், ஆனால் அப்போது தெரியாதது என்ன?

இந்த அனுபவத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொண்டேன்?

கடைசியாக எழுதுங்கள்:

“சரிசெய்ய வேண்டியதை சரிசெய்கிறேன். கற்றுக்கொள்ள வேண்டியதை கற்றுக்கொள்கிறேன். மாற்ற முடியாததை விடுகிறேன்.”

பேப்பரை மூடுங்கள்.

ஒரே வழக்கை உங்கள் மனதில் தினமும் மீண்டும் விசாரிக்க வேண்டியதில்லை.

GAME 2 – “Guilt or Action?”

ஒரு guilty thought வந்தவுடன் இரண்டு box மட்டும் உருவாக்குங்கள்:

GUILT | ACTION

உதாரணம்:

“நான் அவரிடம் கோபமாக பேசிவிட்டேன்.”

ACTION:

“மன்னிப்பு கேட்கிறேன். அடுத்த முறை அமைதியாக பேசப் பழகுகிறேன்.”

“நான் சரியாகப் படிக்கவில்லை.”

ACTION:

“இன்று 30 நிமிடம் முழு கவனத்துடன் படிக்கிறேன்.”

“ஐந்து வருடத்திற்கு முன்பு நடந்ததை என்னால் மாற்ற முடியாது.”

ACTION:

“அதை ஏற்றுக்கொண்டு இன்றைய வாழ்க்கைக்குத் திரும்புகிறேன்.”

ஒவ்வொரு guilt-ஐயும் ஒரு constructive action-ஆக மாற்றும்போது உங்களுக்கு நீங்களே ஒரு point கொடுங்கள்.

ஒரு நாளைக்கு 5 Action Points எடுக்க முயற்சி செய்யுங்கள்.

GAME 3 – “Guilt Backpack”

உங்கள் முதுகில் ஒரு பெரிய பை இருப்பதாக கற்பனை செய்யுங்கள்.

அதற்குள் பல கற்கள்:

“நான் நல்ல பெற்றோராக இல்லை.”

“அந்த உறவு என்னால்தான் முறிந்தது.”

“நான் ஒரு வாய்ப்பை இழந்துவிட்டேன்.”

“நான் தவறான முடிவு எடுத்தேன்.”

“நான் ஒருவரை ஏமாற்றிவிட்டேன்.”

ஒவ்வொரு guilt-ஐயும் ஒரு சிறிய பேப்பரில் எழுதுங்கள்.

ஒவ்வொன்றாக எடுத்து மூன்று கேள்விகளில் ஒன்றைக் கேளுங்கள்:

இதை நான் சரிசெய்ய வேண்டுமா?

இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமா?

அல்லது இதை விட வேண்டுமா?

சரிசெய்ய வேண்டுமென்றால் — ஒரு Action எழுதுங்கள்.

கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் — ஒரு Lesson எழுதுங்கள்.

இனி மாற்றுவதற்கு எதுவும் இல்லை என்றால்:

“இதை தினமும் சுமக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.”

என்று சொல்லி அந்தப் பேப்பரை கிழித்துவிடுங்கள்.

இறுதியாக ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த ஒவ்வொரு முடிவும் சரியானது என்று நிரூபித்த பிறகுதான் நீங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற அவசியமில்லை.

ஆம், சில தவறுகள் நடந்திருக்கலாம்.

சில விஷயங்களை வேறு மாதிரி செய்திருக்கலாம்.

சிலரை தவறாகப் புரிந்திருக்கலாம்.

சில நேரங்களில் உங்களையும் மற்றவர்கள் தவறாகப் புரிந்திருக்கலாம்.

ஆனால் அன்றைய சூழ்நிலை, அன்றைய புரிதல், அன்றைய மனநிலை ஆகியவற்றுடன் உங்களால் முடிந்ததை நீங்கள் செய்திருக்கலாம்.

கற்றுக்கொள்ள வேண்டியதை கற்றுக்கொள்ளுங்கள்.

சரிசெய்ய முடிந்ததை சரிசெய்யுங்கள்.

மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் வாழ்க்கைக்குத் திரும்புங்கள்.

உங்கள் கடந்த காலம் உங்களுக்குப் பாடம் சொல்லலாம்.

ஆனால் அது உங்கள் நிகழ்காலத்தைத் தண்டிக்க வேண்டியதில்லை.

உங்கள் தவறுகள் உங்களை வழிநடத்தலாம்.

ஆனால் அவை உங்கள் அடையாளமாக மாற வேண்டியதில்லை.

உங்கள் பொறுப்புகள் உங்களை வளர்க்கட்டும்.

உங்கள் குற்ற உணர்வு உங்களைச் சிறைப்படுத்த வேண்டாம்.

“நடந்ததை மாற்ற முடியாது. ஆனால் இனி நடக்கப்போவதை நான் மாற்ற முடியும்.”

Ready to Talk?

Get in Touch
Scroll to Top

20+ years of experience in psychotherapy: Expert care from a seasoned professional.

Mother of three, balancing family and career: Empathetic guidance from someone who understands real-life challenges.

Spouse of a professor, fostering a healthy family dynamic: Benefit from a holistic approach that values your family health.

Personal experience with stress, anxiety, and depression: Receive support from someone who’s been through similar struggles.

A proven approach focused on ease and wisdom: Effective techniques that are easy to integrate into your life.

Advocate for transformative mental well-being: Experience meaningful changes in your mental health.

Belief in the power of a calm, conscious mind: Achieve a peaceful and focused state of mind.

Empathetic guidance rooted in real-world experience: Practical advice that works in everyday situations.

Refined and tested methods for tangible outcomes: See real improvements in your mental health and well-being.

Holistic approach addressing underlying issues: Long-lasting solutions rather than temporary fixes.

Commitment to long-term solutions over temporary fixes: Sustainable mental health improvements you can rely on.