
Self-understanding
Understanding Self-Doubt—and Building Confidence
சுயசந்தேகம் – அதை புரிந்துகொள்வோம், மாற்றிக் கொள்வோம்
Recognise old patterns of doubt and build confidence through small, steady actions.
சுயசந்தேகத்தின் பின்னணியைப் புரிந்துகொண்டு சிறிய செயல்களால் தன்னம்பிக்கையை வளர்ப்போம்.
English reading version of Dr. Mehar’s original Tamil writing.
Do these questions often appear in your mind?
“What will others think of me? Am I doing the right thing? Can I really do this? What if I fail? What if I make the wrong decision?”
When such questions repeatedly occupy the mind, we call it self-doubt.
It is more than simply a lack of confidence. It is a learned way of continually questioning our abilities, decisions, values and future.
When self-doubt is strong, even success may not feel satisfying, because attention stays on mistakes rather than progress.
The thinking behind self-doubt
In the Calmscious approach, thoughts are connected with feelings and behaviour.
Repeated thoughts such as “I am not enough,” “I cannot do this properly,” and “Others will criticise me” may be accompanied by anxiety, hesitation and avoidance.
The article discusses how repeated experiences can become familiar mental pathways.
A child who often hears “You are not doing it correctly,” “You cannot do it,” “Why aren’t you like others?” or “You always make mistakes” may begin to take these messages as beliefs.
Over time, they may arise automatically. The article describes this as negative conditioning.
Even when nobody is criticising them in the present, they may begin to expect criticism.
Why childhood experience matters
People who struggle with self-doubt may have experienced frequent criticism, comparisons, harsh parenting, limited appreciation or emotional neglect.
The pain associated with these experiences may influence current thinking.
That can help explain why self-doubt becomes particularly noticeable around new opportunities, important decisions, public speaking, relationships and leadership.
Sometimes a present fear may reflect an older emotional experience.
The Calmscious perspective
When doubt appears, ask: “When did I first experience this feeling?”
Instead of fighting only with the thought, try to understand where it began.
Awareness can create a little space between you and a familiar old pattern.
Recognising self-doubt as a learned pattern, rather than a statement of your worth, can open up possibilities for change.
Five practices
1. Interrupt the familiar stream
When doubt appears, remind yourself:
• What I am doing has meaning.
• I can learn.
• I can develop trust in my decisions.
• I am taking steps forwards.
The article emphasises repeated encouraging language as part of practising a new way of thinking.
2. Question the fear of other people’s opinions
Move from “What will everyone think of me?” towards “What do I think of myself?”
Practise considering the possibility that people may think well of you, rather than automatically expecting criticism.
The article places importance on internal recognition alongside external approval.
3. Collect evidence of what you have managed
Recall appreciation you have received, problems you have solved, achievements and challenges you have faced.
The article discusses negativity bias: the tendency for difficult experiences to attract attention.
Remembering positive experiences can provide a more balanced picture of your capabilities.
4. Visualise a confident step
Picture reaching a goal, taking action with confidence, receiving appreciation or enjoying a successful experience.
The original writing describes visualisation as a way to move attention from fear towards possibility, drawing a comparison between imagined and lived experiences.
Spend a few minutes forming a clear picture of the action you want to take.
5. Aim for progress rather than perfection
A belief beneath self-doubt may be: “I must do everything correctly.”
Growth involves learning, trying and continuing. Confidence can develop through action even while some uncertainty remains.
A final thought
Self-doubt is not proof that you lack ability. Sometimes it is the voice of older experiences trying to protect you from failure.
Understanding its background, questioning its message and practising new responses can help create a different direction.
Each time you choose a little trust over fear, action over hesitation and learning over criticism, you practise another way of responding.
You need not wait until you feel completely confident before beginning.
Small, repeated confident actions can help confidence grow.
“You may have more ability than you currently recognise. Self-doubt does not have to define who you are.”
தமிழ் · அசல் பதிவு
சுயசந்தேகம் (Self-Doubt) – அதை புரிந்துகொள்வோம், மாற்றிக் கொள்வோம்
உங்கள் மனதில் அடிக்கடி இப்படி கேள்விகள் எழுகிறதா?
* மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
* நான் செய்வது சரியா?
* என்னால் இதை உண்மையில் செய்ய முடியுமா?
* நான் தோல்வியடைந்தால் என்ன ஆகும்?
* நான் தவறான முடிவு எடுத்துவிட்டால் என்ன ஆகும்?
இப்படிப்பட்ட கேள்விகள் மீண்டும் மீண்டும் மனதை ஆக்கிரமித்தால், அதற்கு சுயசந்தேகம் (Self-Doubt) என்று பெயர்.
சுயசந்தேகம் என்பது வெறும் தன்னம்பிக்கையின்மை அல்ல. அது நமது திறமைகள், முடிவுகள், மதிப்புகள் மற்றும் எதிர்காலம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பும் ஒரு கற்றுக்கொள்ளப்பட்ட மனப்பாங்காகும். சுயசந்தேகம் அதிகமாக இருக்கும்போது, வெற்றிகள் கிடைத்தாலும் மனநிறைவு கிடைக்காது. ஏனெனில் மனம் முன்னேற்றத்தை விட தவறுகளையே அதிகமாக கவனிக்கத் தொடங்குகிறது.
சுயசந்தேகத்தின் பின்னால் இருக்கும் அறிவியல்
Calmscious படி, நமது எண்ணங்கள் நமது உணர்வுகளையும் நடத்தைகளையும் தீர்மானிக்கின்றன.
“நான் போதுமானவன் இல்லை.”
“என்னால் சரியாக செய்ய முடியாது.”
“மற்றவர்கள் என்னை விமர்சிப்பார்கள்.”
போன்ற எண்ணங்கள் தொடர்ந்து வந்தால், அவை பதட்டம், தயக்கம் மற்றும் தவிர்க்கும் நடத்தைகளை உருவாக்குகின்றன.
நரம்பியல் அறிவியல் (Neuroscience) கூறுவது என்னவென்றால், மூளை மீண்டும் மீண்டும் நிகழும் அனுபவங்களின் அடிப்படையில் நரம்பியல் பாதைகளை (Neural Pathways) உருவாக்குகிறது.
ஒரு குழந்தை அடிக்கடி:
* “நீ சரியாக செய்யவில்லை.”
* “உன்னால் முடியாது.”
* “மற்றவர்களைப் போல ஏன் இல்லை?”
* “நீ எப்போதும் தவறு செய்கிறாய்.”
போன்ற வார்த்தைகளை கேட்டால், அந்த தகவல்கள் மூளையில் நம்பிக்கைகளாக பதியத் தொடங்குகின்றன.
காலப்போக்கில் அவை தானாக எழும் எண்ணங்களாக மாறிவிடுகின்றன.
இதையே Negative Conditioning என்று உளவியலில் கூறுகிறார்கள்.
அதன்பிறகு உண்மையில் யாரும் விமர்சிக்காவிட்டாலும், மூளை விமர்சனத்தை எதிர்பார்க்கத் தொடங்குகிறது.
ஏன் குழந்தைப் பருவ அனுபவங்கள் முக்கியம்?
சுயசந்தேகம் கொண்ட பலர் பின்வரும் அனுபவங்களை எதிர்கொண்டிருக்கலாம்:
* அதிகமான விமர்சனங்கள்
* மற்றவர்களுடன் ஒப்பிடுதல்
* கடுமையான பெற்றோர் அணுகுமுறை
* பாராட்டுகளின் பற்றாக்குறை
* மீண்டும் மீண்டும் குறை கூறுதல்
* உணர்ச்சி ரீதியான புறக்கணிப்பு
இந்த அனுபவங்களால் ஏற்பட்ட மனவலி மறைந்துவிடாது. அது ஒரு மறைமுக மனப்பதிவாக இருந்து தற்போதைய சிந்தனைகளை பாதிக்கத் தொடங்குகிறது.
அதனால் தான் புதிய வாய்ப்புகள், முக்கிய முடிவுகள், பொது மேடை பேச்சு, உறவுகள் அல்லது தலைமைப் பொறுப்புகள் போன்ற சூழ்நிலைகளில் சுயசந்தேகம் அதிகமாக வெளிப்படுகிறது.
பல நேரங்களில் தற்போதைய பயம் தற்போதைய சூழ்நிலையால் உருவானது அல்ல; அது பழைய உணர்ச்சி அனுபவங்களின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.
Calmscious பார்வை
சுயசந்தேகம் வரும்போது உங்களிடம் நீங்கள் கேளுங்கள்:
“இந்த உணர்வை நான் முதன்முதலாக எப்போது அனுபவித்தேன்?”
அந்த எண்ணத்துடன் போராடுவதற்கு பதிலாக, அதன் வேர்காரணத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
விழிப்புணர்வு (Awareness) உங்களுக்கும் அந்த பழைய மனப்பதிவுக்கும் இடையில் ஒரு இடைவெளியை உருவாக்கும்.
சுயசந்தேகம் என்பது உண்மை அல்ல; அது கற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மனப்பதிவு என்பதை உணரும்போது, அதை மாற்றுவது எளிதாகிறது.
சுயசந்தேகத்தை உடைக்கும் 5 நடைமுறைகள்
1. எண்ண ஓட்டத்தை உடையுங்கள்
சுயசந்தேகம் தோன்றும் போது உறுதியாக சொல்லுங்கள்:
* நான் செய்வது அர்த்தமுள்ள ஒன்று.
* என்னால் கற்றுக்கொள்ள முடியும்.
* என் முடிவுகளை நான் நம்புகிறேன்.
* நான் சரியான திசையில் முன்னேறுகிறேன்.
நேர்மறை வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்துவது புதிய நரம்பியல் பாதைகளை உருவாக்க உதவுகிறது.
2. மற்றவர்களின் கருத்து பற்றிய பயத்தை சவாலுக்கு உட்படுத்துங்கள்
சுயசந்தேகத்தின் மையக் கேள்வி:
“மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?”
இதனை மாற்றி:
“நான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறேன்?”
என்று கேளுங்கள்.
மற்றவர்கள் என்னை பற்ற நல்ல விதமாகவே நினைப்பார்கள் என்று ஆழமாக சொல்லிகொள்ளுங்கள்.
உளவியல் ஆய்வுகள் கூறுவது என்னவென்றால், வெளிப்புற அங்கீகாரத்தை விட உள்ளார்ந்த அங்கீகாரம் (Internal Validation) அதிக மனநிலைத்தன்மையை உருவாக்குகிறது.
3. உங்கள் வெற்றிகளுக்கான ஆதாரங்களை சேகரியுங்கள்
மூளை தோல்விகளை வெற்றிகளை விட அதிகமாக நினைவில் வைத்திருக்கும். இதற்கு Negativity Bias என்று பெயர்.
அதை சமநிலைப்படுத்த:
* நீங்கள் பெற்ற பாராட்டுகள்
* நீங்கள் தீர்த்த பிரச்சனைகள்
* நீங்கள் அடைந்த சாதனைகள்
* நீங்கள் கடந்து வந்த சவால்கள்
இவற்றை நினைவுகூருங்கள்.
ஒவ்வொரு நேர்மறை நினைவும் சுயசந்தேகத்தின் வலிமையை குறைத்து தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
4. வெற்றியை மனதில் காட்சிப்படுத்துங்கள்
விளையாட்டு வீரர்கள், தலைவர்கள் மற்றும் வெற்றியாளர்கள் பயன்படுத்தும் முக்கியமான கருவிகளில் ஒன்று Visualization.
மூளை கற்பனை செய்யப்பட்ட அனுபவங்களுக்கும் உண்மையான அனுபவங்களுக்கும் ஒரே மாதிரியான நரம்பியல் பதில்களை அளிக்கிறது.
தினமும் சில நிமிடங்கள்:
* உங்கள் இலக்கை அடைந்ததை
* தன்னம்பிக்கையுடன் செயல்படுவதை
* பாராட்டுகளை பெறுவதை
* வெற்றியை அனுபவிப்பதை
மனதில் காட்சிப்படுத்துங்கள்.
இது பயத்திலிருந்து வாய்ப்புகளின் பக்கம் மூளையை நகர்த்தும்.
5. முழுமையை அல்ல, முன்னேற்றத்தை நோக்குங்கள்
சுயசந்தேகத்தின் பின்னால் இருக்கும் முக்கிய நம்பிக்கை:
“நான் எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டும்.”
ஆனால் வளர்ச்சி என்பது தவறுகளைத் தவிர்ப்பதில் இல்லை.
கற்றுக்கொள்வதில், முயற்சி செய்வதில், தொடர்ந்து முன்னேறுவதில்தான் இருக்கிறது.
தன்னம்பிக்கை என்பது முழுமையாக இருப்பதால் உருவாகாது.
நிச்சயமற்ற நிலையிலும் தொடர்ந்து செயல்படுவதன் மூலம் உருவாகிறது.
இறுதி சிந்தனை
சுயசந்தேகம் என்பது நீங்கள் திறமையற்றவர் என்பதற்கான ஆதாரம் அல்ல.
அது பல நேரங்களில் தோல்வியிலிருந்து உங்களை பாதுகாக்க முயற்சிக்கும் பழைய அனுபவங்களின் குரல் மட்டுமே.
அதன் வேரை புரிந்துகொண்டு, அதன் செய்தியை சவாலுக்கு உட்படுத்தி, புதிய சிந்தனைகளை உருவாக்கும் தருணத்திலிருந்து உங்கள் மனம் புதிய பாதையை உருவாக்கத் தொடங்குகிறது.
ஒவ்வொரு முறையும் நீங்கள்:
* பயத்தை விட நம்பிக்கையை தேர்வு செய்யும்போது,
* தயக்கத்தை விட செயலை தேர்வு செய்யும்போது,
* விமர்சனத்தை விட வளர்ச்சியை தேர்வு செய்யும்போது,
உங்கள் மூளைக்கு புதிய சிந்தனை முறையை கற்றுக்கொடுக்கிறீர்கள்.
தன்னம்பிக்கை வந்த பிறகு சுயசந்தேகம் மறையாது.
சிறிய தன்னம்பிக்கையான செயல்களை தொடர்ந்து செய்வதன் மூலம் சுயசந்தேகம் குறைந்து தன்னம்பிக்கை உருவாகும்.
நினைவில் கொள்ளுங்கள்:
“நீங்கள் நினைப்பதை விட அதிக திறன் கொண்டவர் நீங்கள். சுயசந்தேகம் உங்கள் உண்மை அல்ல; அது கடந்தகாலத்தில் உருவான ஒரு பழைய மனப்பதிவு மட்டுமே.”
