Investing in Your Child’s Emotional Wellbeing | குழந்தையின் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடு: மனநலம்

Parents sharing a warm moment with their son while playing with wooden blocks.

Parenting

Investing in Your Child’s Emotional Wellbeing

குழந்தையின் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடு: மனநலம்

BY DR. MEHAR NITHYAN   /   EXPERIENCE-BASED WRITING

Making room for love, time and understanding while planning a child’s future.

English translation of Dr. Mehar’s Tamil writing.

Every parent wants their child’s future to be secure.

For that reason, we save money. We invest in policies, insurance, land, gold and education plans. That is good. But there is an investment more important than money: the child’s mental health.

Today, many children grow up in stressful surroundings marked by fear, scolding, parental conflict, comparisons, harsh words, punishment and a lack of affection. Even if parents save large amounts for their future, the child may continue struggling without peace inside.

A child’s first thirteen years are very important.

The original Tamil article states: “It is only children who did not have a happy environment during their first thirteen years who develop not only mental health conditions such as OCD, bipolar disorder and schizophrenia, as distress, worry, fear and anxiety increase, but also various physical illnesses.”

The stress, fear and insecurity experienced during that period directly affect their brain development and mental health.

The effects extend beyond studies to confidence, thinking, creativity, relationships, decision-making and success in life.

Today, the reason many people struggle so much in life is not a lack of money, but a lack of inner peace.

Trauma does not come only from major events. Daily harsh words, excessive scolding, a lack of affection, tension at home and an environment that does not understand a child’s feelings can also affect the child’s mind deeply.

Emotionally wounded children may have to struggle harder even for small achievements. They may become afraid easily, find it difficult to believe in themselves and repeatedly experience stress.

Children raised with emotional safety, love, understanding, peace and support become emotionally stronger. They develop creativity, confidence and the capacity to succeed.

Research says this too: children who receive emotional support in childhood achieve greater success and balance in life.

Truly successful children do not simply depend on their parents’ money. They carry emotional strength. They create their own success and financial resources.

So, while investing money in your child’s future, invest in their mental health too.

Listen to them. Understand their emotional pain. Offer calm instead of fear, love instead of pressure and understanding instead of scolding.

The greatest investment in a child’s future is not money alone. It is a peaceful, healthy, strong mind.

தமிழ் · அசல் பதிவு

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அதற்காக நாம் பணத்தை சேமிக்கிறோம்.
பாலிசி, இன்சூரன்ஸ், நிலம், தங்கம், கல்வி திட்டங்கள் என்று பல முதலீடுகள் செய்கிறோம்.

அது நல்லதே.
ஆனால் பணத்தை விட முக்கியமான ஒரு முதலீடு இருக்கிறது.

அது குழந்தையின் மனநலம்.

இன்று பல குழந்தைகள் பயம், கண்டிப்பு, பெற்றோரின் சண்டைகள், ஒப்பீடு, கடுமையான வார்த்தைகள், தண்டனைகள், அன்பின்மை போன்ற மனஅழுத்த சூழலில் வளர்கிறார்கள்.
பெற்றோர் அவர்களின் எதிர்காலத்திற்காக லட்சக்கணக்கில் பணம் சேமித்தாலும், அந்த குழந்தை உள்ளுக்குள் அமைதியின்றி போராடிக்கொண்டே இருக்கும்.

ஒரு குழந்தையின் முதல் 13 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை.

மன உளைச்சல், கவலை, பயம், மற்றும் பதற்றம் அதிகமாவதால் OCD, Bipolar, Schizophrenia போன்ற மன அழுத்த பாதிப்புகள் மட்டுமல்லாது உடலிலும் பலவித நோய்களுக்கும் உள்ளாவது முதல் 13 வயது காலம் மகிழ்ச்சி சூழல் அமையாத குழந்தைகள் மட்டுமே.

அந்த காலத்தில் அவர்கள் அனுபவிக்கும் மனஅழுத்தங்கள், பயங்கள், பாதுகாப்பின்மை ஆகியவை அவர்களின் மூளை வளர்ச்சியையும் மனநலத்தையும் நேரடியாக பாதிக்கின்றன.

அது படிப்பை மட்டுமல்ல…
அவர்களின் தன்னம்பிக்கை, சிந்தனை திறன், புதிய விஷயங்களை உருவாக்கும் திறன், உறவுகள், முடிவெடுக்கும் திறன், வாழ்க்கை வெற்றி அனைத்தையும் பாதிக்கிறது.

இன்று பலர் வாழ்க்கையில் அதிகமாக போராடுவதற்கான காரணம் பணமின்மை அல்ல…
மன அமைதியின்மை.

Trauma என்பது பெரிய சம்பவங்களால் மட்டும் வருவது இல்லை.
தினமும் கிடைக்கும் கடுமையான வார்த்தைகள், அதிக கண்டிப்பு, அன்பின்மை, வீட்டில் இருக்கும் பதட்டம், குழந்தையின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத சூழல் — இவையும் குழந்தையின் மனதை ஆழமாக பாதிக்கலாம்.

மனதில் காயம் பெற்ற குழந்தைகள் வாழ்க்கையில் ஒவ்வொரு சிறிய வெற்றிக்காக கூட அதிகமாக போராட வேண்டியிருக்கும்.
அவர்கள் எளிதில் பயப்படலாம், தங்களை நம்ப முடியாமல் போகலாம், மீண்டும் மீண்டும் மனஅழுத்தத்தில் சிக்கிக்கொள்ளலாம்.

ஆனால் மன பாதுகாப்பு, அன்பு, புரிதல், அமைதி, ஆதரவு ஆகியவற்றுடன் வளர்க்கப்படும் குழந்தைகள் மனதளவில் வலிமையானவர்களாக மாறுகிறார்கள்.
அவர்கள் இயல்பாகவே படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் வளர்கிறார்கள்.

ஆராய்ச்சிகளும் இதையே கூறுகின்றன —
குழந்தைப் பருவத்தில் மன ஆதரவு கிடைத்த குழந்தைகள் வாழ்க்கையில் அதிக வெற்றியையும் சமநிலையையும் அடைகிறார்கள்.

உண்மையில் மிகவும் வெற்றிகரமான குழந்தைகள் பெற்றோரின் பணத்தை மட்டும் எதிர்பார்ப்பதில்லை.
அவர்கள் மன வலிமையை பெற்றிருப்பார்கள்.

அவர்கள் தங்களுக்கான வெற்றியையும் பணத்தையும் தாங்களே உருவாக்குவார்கள்.

ஆகவே உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்யும் போது…
அவர்களின் மனநலத்திலும் முதலீடு செய்யுங்கள்.

அவர்களை கேளுங்கள்.
அவர்களின் மன வேதனைகளை புரிந்துகொள்ளுங்கள்.
பயத்திற்கு பதிலாக அமைதியை கொடுங்கள்.
அழுத்தத்திற்கு பதிலாக அன்பை கொடுங்கள்.
கண்டிப்பிற்கு பதிலாக புரிதலை கொடுங்கள்.

ஏனெனில் ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய முதலீடு பணம் மட்டும் அல்ல…
அமைதியான, ஆரோக்கியமான, வலிமையான மனம் தான்.

Dr. Mehar Nithyan, PhD. (Psychology)
Director- Calmscious Psychotherapy Clinic
@8838428286

Ready to Talk?

Get in Touch
Scroll to Top

20+ years of experience in psychotherapy: Expert care from a seasoned professional.

Mother of three, balancing family and career: Empathetic guidance from someone who understands real-life challenges.

Spouse of a professor, fostering a healthy family dynamic: Benefit from a holistic approach that values your family health.

Personal experience with stress, anxiety, and depression: Receive support from someone who’s been through similar struggles.

A proven approach focused on ease and wisdom: Effective techniques that are easy to integrate into your life.

Advocate for transformative mental well-being: Experience meaningful changes in your mental health.

Belief in the power of a calm, conscious mind: Achieve a peaceful and focused state of mind.

Empathetic guidance rooted in real-world experience: Practical advice that works in everyday situations.

Refined and tested methods for tangible outcomes: See real improvements in your mental health and well-being.

Holistic approach addressing underlying issues: Long-lasting solutions rather than temporary fixes.

Commitment to long-term solutions over temporary fixes: Sustainable mental health improvements you can rely on.