
Emotional wellbeing
How Can We Understand Someone in Emotional Distress?
மனநலப் பிரச்சனையில் இருப்பவர்களை எப்படி புரிந்துகொள்வது?
How listening and acknowledging someone’s feelings can offer support.
English translation of Dr. Mehar’s Tamil writing.
Truly understanding someone experiencing mental health difficulties is not always easy.
We may think, “Do they need to think so much about this?” or “Is this really such a big issue?” Something that seems ordinary to us may be deeply painful to a person who has been emotionally hurt.
They may talk about the same thing repeatedly, complain or blame others. Listening can feel frustrating. We may immediately try to explain logically: “You’re thinking about it wrongly” or “That’s not what happened.”
But in such moments, reasoning alone may not reach them.
I describe two ways the mind can operate: the logical mind and the emotional mind.
When we feel calm, we can reason, learn from experience, accept what has happened and make decisions using facts. When we carry deep emotional wounds, feelings may lead our thinking. Past memories return, fear about the future grows, small matters feel overwhelming and other people’s words hurt more.
This is why people may say: “No one understands me. No one stands by me. No one listens. There is no one I can trust.”
These are expressions of what they are experiencing.
What can we do?
First, avoid rushing into a logical argument. When someone is overwhelmed, recognise their feeling of being misunderstood.
Second, listen fully. Let them speak without interruptions. Do not hurry to offer advice. Being heard can itself bring comfort.
Third, acknowledge the feeling. Their interpretation does not have to be entirely correct for their pain to be real. Try saying: “I’m sorry you are having such a hard time,” “That must have been painful,” or “I understand that you feel this way.”
Fourth, do not make proving them wrong your immediate aim. Help them feel that they are not alone and that someone is trying to understand.
Fifth, offer reassurance and a sense of safety. A person experiencing depression or intense stress may first need a person who understands them, before they can consider solutions.
When they feel safe and accepted, their mind may gradually settle.
People experiencing mental health difficulties may carry pain that others cannot see. Understanding, compassion and acceptance matter. In my experience, feeling truly understood can mark the beginning of a person’s healing journey.
தமிழ் · அசல் பதிவு
மனநலப் பிரச்சனையில் இருப்பவர்களை எப்படி புரிந்துகொள்வது?
மனநலப் பிரச்சனையில் இருப்பவர்களை உண்மையாகப் புரிந்துகொள்வது மிகவும் எளிதான விஷயம் அல்ல.
பொதுவாக நாம், “இதுக்காக இவ்வளவு யோசிக்க வேண்டுமா?”, “இது ஒரு பெரிய விஷயமா?” என்று நினைக்கலாம். நமக்குப் பார்த்தால் அது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அதே விஷயம், மனதளவில் காயமடைந்த ஒருவருக்கு மிகவும் வேதனையான அனுபவமாக இருக்கலாம்.
அவர்கள் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசலாம். அடிக்கடி குறை கூறலாம். சில நேரங்களில் மற்றவர்களைக் குற்றம் சாட்டலாம். இதையெல்லாம் கேட்கும் நமக்கு எரிச்சலாக இருக்கலாம். உடனே அவர்களிடம், “நீ தவறாக நினைக்கிறாய்”, “அப்படி இல்லை” என்று தர்க்கரீதியாக விளக்க முயற்சிப்போம்.
ஆனால் அப்படிப்பட்ட நேரங்களில் தர்க்கம் வேலை செய்யாது.
மனித மனதில் இரண்டு விதமான செயல்பாடுகள் உள்ளன
1. தர்க்க மனம் (Logical Mind)
மனம் அமைதியாக இருக்கும்போது நாம் தர்க்கரீதியாக சிந்திப்போம். அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வோம். நடந்ததை ஏற்றுக்கொண்டு முன்னேறுவோம். உண்மையை வைத்து முடிவெடுப்போம்.
2. உணர்ச்சி மனம் (Emotional Mind)
ஆனால் மனதில் ஆழமான காயம் ஏற்பட்டால், உணர்ச்சிகளே சிந்தனையை வழிநடத்த ஆரம்பிக்கும். கடந்த கால நினைவுகள் மீண்டும் மீண்டும் மனதில் வரும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும். சிறிய விஷயங்களைக்கூட பெரியதாக உணர ஆரம்பிப்பார்கள். மற்றவர்களின் வார்த்தைகள் கூட அதிகமாக காயப்படுத்தும்.
அதனால்தான் மனநலப் பிரச்சனையில் இருப்பவர்கள் அடிக்கடி,
* “என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை.”
* “எனக்கு யாரும் துணையாக இல்லை.”
* “நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை.”
* “என்னை நம்புவதற்கு யாரும் இல்லை.”
என்று கூறுவார்கள்.
இவை வெறும் வார்த்தைகள் அல்ல. அவர்கள் அனுபவிக்கும் உணர்வுகளின் வெளிப்பாடு.
அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
அவர்களை மாற்ற முயற்சிப்பதை விட, முதலில் அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
1. உடனே தர்க்கம் பேச வேண்டாம்
அவர்கள் மிகுந்த உணர்ச்சி நிலையில் இருக்கும்போது, தர்க்கரீதியான விளக்கங்கள் அவர்களுக்கு உதவாது. மாறாக, “என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை” என்ற உணர்வை நாம் புரிந்துகொண்டோம் என்று சொல்லலாம்.
2. முதலில் முழுமையாகக் கேளுங்கள்
அவர்கள் பேசட்டும். இடையில் நிறுத்தாதீர்கள். அறிவுரை சொல்ல அவசரப்படாதீர்கள். பல நேரங்களில், ஒருவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆறுதல், யாரோ ஒருவர் அவரை முழுமையாகக் கேட்பதுதான்.
3. அவர்களின் உணர்வை ஏற்றுக்கொள்ளுங்கள்
அவர்கள் சொல்வது முழுவதும் சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் அனுபவிக்கும் வேதனை உண்மையானது.
அந்த நேரத்தில்,
* “நீங்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் என்பதற்கு வருந்துகிறேன்.”
* “இது உங்களுக்கு மிகவும் வலியாக இருந்திருக்கும்.”
* “நீங்கள் இப்படிப் உணர்வது புரிகிறது.”
என்ற வார்த்தைகள் அவர்களுக்கு பாதுகாப்பான உணர்வைத் தரும்.
4. அவர்கள் தவறு என்பதை நிரூபிக்க முயற்சிக்க வேண்டாம்
அந்த நேரத்தில் உங்கள் நோக்கம், அவர்கள் தவறு என்பதை நிரூபிப்பது அல்ல. அவர்கள் தனியாக இல்லை, யாரோ ஒருவர் தங்களைப் புரிந்துகொள்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்துவதுதான்.
5. அவர்களுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பான உணர்வையும் கொடுங்கள்
மனச்சோர்வு அல்லது தீவிரமான மனஅழுத்தத்தில் இருக்கும் ஒருவர் முதலில் தேடுவது தீர்வுகளை அல்ல; தன்னைப் புரிந்துகொள்ளும் ஒரு மனிதரை.
அவர்கள் பாதுகாப்பாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவும் உணரும்போது, அவர்களின் மனம் மெதுவாக அமைதியடையத் தொடங்கும்.
இறுதியாக…
மனநலப் பிரச்சனையில் இருப்பவர்கள், அவர்கள் காண முடியாத ஒரு மனவேதனையைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு அறிவுரையை விட, புரிதல் தேவை.
தர்க்கத்தை விட, கருணை தேவை.
விமர்சனத்தை விட, ஏற்றுக்கொள்ளுதல் தேவை.
ஒரு மனிதன் உண்மையாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக உணரும்போதுதான், அவரது குணமடையும் பயணம் ஆரம்பமாகிறது.
எனது பத்துநாள் பயிற்சியை பாருங்கள்.
Dr. Mehar Nithyan, PhD. Psychology
Director – Calmscious Psychotherapy Clinic
@918838428285
